Saturday, October 10, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 7

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல் கலித்தாழிசை பாடல் 7 கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும் வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும் தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள் கோனே அழேல் அழேல் தாலேலோ குடந்தைக் கிடந்தானே தாலேலோ
பொருள்:
கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும் - நறுமணம் நிறைந்த நல்ல துளசியைக் கையால் கண்ணி தொடுத்து கான் - மணம் கான் + ஆர் - கானார் நறுமை - நன்மை (பயக்கும்) துழாய் - துளசி வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும் - வானின் செழுமை மிகுந்த சோலையிலிருக்கும் கற்பகத் தருவின் பூக்களால் நெருக்கித் தொடுத்த மாலையை வாசிகை - மலர்களால் செறிவாகத் தொடுக்கப் பட்ட மாலை தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள் - தேன் நிறைந்த மலர் மேல் வைத்துத் திருமகள் அனுப்பி இருக்கிறாள். தேன் நிறைந்த மலரில் இருக்கும் மங்கைன்னும் படிக்கலாம். இதெல்லாம் உடன் தொக்கத் தொகைன்னு சொல்வாங்க. கோனே அழேல் அழேல் தாலேலோ குடந்தைக் கிடந்தானே தாலேலோ - குடந்தையில் படுத்தவாறு இருக்கும் தலைவனே அழாது கண்ணுறங்கு பதவுரை: வானோர்கள் வந்து பரிசளித்தாகி விட்டது. இப்போது தாமரைச் செல்வியே பரிசளிப்பதாகச் சொல்கிறார் பெரியாழ்வார். மங்கை உறையும் மார்புக்கு நறுமண மாலை சூட்டுவதாகச் சொல்கிறார். எப்படிப் பட்ட மாலை? நறுமணம் மிக்க நல்ல துளசி இலைகளை கண்ணியாகத் தொடுத்து, கற்பகத் தருவின் மலர்களை செறிவாகக் கோர்த்துத் தன் கையால் செய்த மாலையை அனுப்புகிறாள். இப்ப உனக்கு மனசு நிறைஞ்சுதான்னு கேட்டுத் தாலாட்டுகிறார் தாயுமான ஆழ்வார்.

5 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சூப்பர்! ஆயிரம் பேர் ஆயிரம் பரிசு கொடுத்தாலும், அவளே கை தொடுத்துக் கொடுக்கும் சின்னூண்டு மாலை போல் வருமா? :)

//தேனார் மலர்மேல் திருமங்கை//

அலர்மேல் மங்கை போல என்ன அழகான தமிழ்ப் பெயர்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்//

கற்பக மரம் பூ-வா? ஒரு ஃபோட்டோ போடறது? :)
என்ன தமிழ், முகவை - கொஞ்ச நாளா படங்களே காணுவதில்லை பதிவுகளில்? :)

தமிழ் said...

வானார் ன்னா, தேவலோகத்தில் நிறைந்துள்ள ன்னு பொருள் வராதா??

முகவை மைந்தன் said...

இங்கயும் பொருட்பிழை.
கானார் நறுந்துழாய் - காட்டில் நிறைந்த மணம் நிறைந்த துளசி

தேனார் மலர்மேல் திருமங்கைன்னா தேன் நிறைந்த மலர் மேல் உறையும் மங்கைன்னு தான் பொருளாம்.

@தமிழ்
வானார் செழுஞ்சோலை கற்பகத்தின் - வானில் நிறைந்த வளம் பொருந்திய சோலையில் இருக்கும் கற்பக மரத்தின்

ரொம்ப நேரம் செலவு பண்ணேன் இந்தப் பாட்டுக்கு. அதான் இப்படி.. கிகிகிகிகி

@ரவி
படங்கள் போட்டுப் பழகணும். இதெல்லாம் ஒரு திறமை தானே. இந்த அழகுல சொந்தப் படம் போடணுமுன்னு நப்பாசை வேற. இப்போதைக்கு கண்டுக்காதிங்க. விரைவா, படம் போடறதுக்குன்னே ஒரு ஆளை ஏற்பாடு பண்ணிடலாம்.

Mahadevan said...

அலர்மேல் மங்கை meaning please